தினை லட்டு


தேவையான பொருட்கள்

தினை                               - ஒரு ஆழாக்கு (ஒரு ஆழாக்கு 168 மில்லி லிட்டர்)
வெல்லம்                       - தேவையான அளவு
தேன்                               - 4 தேக்கரண்டி
தேங்காய் துருவல்  - 4 தேக்கரண்டி
நெய்                               - 1 தேக்கரண்டி
தண்ணீர்                       - தேவையான அளவு

செய்முறை
வெறும் கடாயில் சுத்தம் செய்த ஒரு ஆழாக்கு தினையை வறுத்துக்கொள்ளவும். ஆறியதும் மின் அம்மியில் (மிக்சி) பொடிக்கவும். தேவையான அளவு வெல்லத்தை தூளாக்கிக்கொள்ளவும். தினைமாவு, வெல்லத்தூளுடன் தேன் மற்றும் தேங்காய்த்துருவல் தலா 4 தேக்கரண்டி சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சிறிது தண்ணீர் விட்டு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளலாம்.
சுவையான மற்றும் சத்தான தினை லட்டு தயார்.

குறிப்பு
தேவையெனில் ஒரு ஏலக்காயை பொடியாக்கி சேர்த்துக்கொள்ளலாம் மற்றும் ஒன்றிரண்டு முந்திரியையும் வறுத்து உருண்டைகளாக பிடிக்கும்போது சேர்த்துக்கொள்ளலாம்.