வெண்பொங்கல்
தேவையான பொருட்கள்
1. பச்சரிசி : 250 கிராம்
2. நெய் : 1 டீஸ்பூன்
3. தண்ணீர் : 600 மி.லி
4. கருவேப்பிலை : சிறிதளவு
5. வறுத்த பாசிப்பருப்பு : 50 கிராம்
6. மிளகு, சீரகம் : 1 டீஸ்பூன்
7. முந்திரி பருப்பு : தேவையான அளவு
8. உப்பு : தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் கலந்து போட்டு உப்பு சேர்த்து குழைய வேகவைத்து இறக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், முந்திரிபருப்பு, கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுத்தவுடன் வேகவைத்துள்ள சாதத்துடன் கலந்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கி பரிமாறவும்.
அவரவர் சுவைக்கு தக்கபடி சட்னி அல்லது சாம்பாருடன் கலந்து சாப்பிடலாம்.