உளுந்து களி


                                               உளுந்து களி

தேவையான பொருட்கள் :

1. நெல்அரிசி,  சாமை அரிசி  – 1/4 கிலோ
2. உளுத்தம் பருப்பு  – 1/4  கிலோ
3. ஏலக்காய் பொடி  -  1/2  ஸ்பூன்
4. நல்லெண்ணெய்  -  3 ஸ்பூன்
5. கருப்பட்டி  -  1  கப்

செய்முறை

 இரண்டு  அரிசி வகைகளையும்  கழுவி  காயவைத்து  சிவக்க  வறுக்கவும்.
 உளுந்தையும்  சிவக்க வறுத்து,  அரிசியுடன்  சேர்த்து  மாவாக  அரைக்கவும்.
கருப்பட்டியை  3  கப்  தண்ணீரில்  கரைத்து  வடிகட்டி  கொதிக்க விடவேண்டும்.  அதனுடன்  3  தேக்கரண்டி  நல்லெண்ணெய்  சேர்க்கவும்.
நன்கு  கொதித்து  வரும்போது தயாராக அரைத்து  வைத்துள்ள  மாவை  தூவி  கட்டி  இல்லாமல்  கை  விடாமல் கிளறவும்.
ஒட்டாமல்  வந்ததும்  ஏலக்காய்  பொடியை  தூவி  இறக்கவும்.