உளுந்து வடை
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு 250 கிராம்
வெங்காயம் பெரியது இரண்டு
பச்சை மிளகாய் இரண்டு
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை250 கிராம் தோல் இல்லாத உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு மிக்சி அல்லது கிரைண்டரில் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி தழை, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளவேண்டும். பின்பு வாணலியில் கடலைஎண்ணெய்யை (செக்கில் ஆட்டிய எண்ணெய்யாக இருந்தால் உடலுக்கு நல்லது மற்றும் ருசியும் நன்றாக இருக்கும்)தேவையான அளவு ஊற்றி எண்ணெய் சூடான உடன் உளுந்தமாவை எடுத்து கையில் அல்லது வாழை இலையில் தட்டி போடவும். பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து சூடாக சட்னியுடன் (தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னி) பரிமாறவும்.