முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

1. முருங்கைக்கீரை - 1 கப்
2. முருங்கைப் பூ - கால் கப் (கிடைத்தால் போடவும்)
3. உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு
4. காய்ந்த மிளகாய் - 3
5. பூண்டு - 5 பல்
6. வேர்க்கடலை -  தேவையான அளவு (2 கைப்பிடியளவு)
7. பொட்டுக்கடலை - தேவையான அளவு (1 கைப்பிடியளவு)



செய்முறை

காய்ந்த மிளகாய், பூண்டு, பொட்டுக்கடலை, வறுத்துத்தோல் நீக்கிய வேர்க்கடலை இவற்றை மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ளுங்கள். முருங்கைக் கீரை, முருங்கைப் பூ இரண்டையும் தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ளுங்கள். வாணலியை (இருந்தால் மண் சட்டியை) அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி முருங்கைக் கீரை, முருங்கைப் பூ, உப்பு சேர்த்து வதக்கி, வேகவையுங்கள். கீரையிலுள்ள நீரே போதும். தேவையெனில் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். தண்ணீர் வற்றி, கீரை வெந்ததும் அரைத்துவைத்திருக்கும் கலவையைச் சேர்த்துக் கிளறி இறக்கினால் மணக்கும் முருங்கைக் கீரை பொரியல் தயார்.





முருங்கைக்கீரை


முருங்கைக்கீரை தாதுவிருத்திக்கு அதிகம் பயன்படும் இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். இரத்த உற்பத்தியை பெருக்கக்கூடியது.


முருங்கைக்கீரையை உலர்த்தி பொடி செய்து வயிற்று வலி மற்றும் பேதியின்போது ஒரு ஸ்பூன் வாயிலிட்டு நீர் அருந்துவதால் குணம் அடையும்.

முருங்கைப் பூவை பாலிலிட்டுச் காய்ச்சி அருந்துவதால் ஆண்மை மிகும் , இதை வெறும் எண்ணெய் or நெய்யில் வதக்கி துவையலாகச் செய்தும் உண்ணலாம்.


முருங்கைப் பட்டையை இடித்து சாறாக்கி, இஞ்சி சாறுடன் வெந்நீரில் சிறிது உப்பு கலந்து குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் மறைந்து வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பசி தோன்றும்.