வரகு அரிசி காளான் பிரியாணி

வரகு ஒரு கண்ணோட்டம்

சிறுதானிய வகைகளுள் ஒன்றாக விளங்கும் வரகு பண்டைய தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். நவதானிய வகைகளில் வரகும் ஒன்றாகும். வரகு அரிசி,கோதுமையை விட சிறந்தது.
தானியங்களுடன் ஒப்பிடும்போது இது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்கள் கொண்டதாகவும் உள்ளது.
இதில் இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.
இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
இது பண்டைய தமிழ் நாட்டில் மிகவும் பொதுவாக உடகொள்ளப்பட்ட ஒரு உணவு தானியமாகும். இப்போது இதன் பயன்பாடு மிகவும் குறைந்து வழக்கில் இருந்து மெல்ல அருகி விட்டது.


அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், ஆரோக்கியத்துக்கு நல்லது.
வரகில் புரதம், கால்சியம், வைட்டமின் பி ஆகியன இருக்கின்றன. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடைவதுடன் உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.

சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்கி, உடல் பருமனை குறைக்கிறது.
தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும் தன்மை வரகு அரிசிக்கு உண்டு.
இதில் உள்ள கனிமச்சத்துக்கள், குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது




வரகு அரிசி காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்

வரகு அரிசி     - 1/4 கிலோ
காளான்           - 100 கிராம்
வெங்காயம்    - 1 பெரியது
தக்காளி            - 1 பெரியது
எண்ணெய்      - தேவையான அளவு
நெய்                  - சிறிதளவு
தயிர்                 - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய்   - 2
ஏலக்காய்              - 3
மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப் பொடி      - 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி  -1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது, பட்டை, சோம்பு, இலவங்கம்,
புதினா, கொத்தமல்லி, மஞ்சள் பொடி - சிறிதளவு.

செய்முறை:

வரகு அரிசி மற்றும் காளானைக் கழுவி, வைத்துக்கொள்ளவேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிகொள்ளவேண்டும். தக்காளி, புதினா, கொத்தமல்லி ஆகிய மூன்றையும் நன்றாக பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, பட்டை, சோம்பு, இலவங்கம் போட்டுத் தாளிக்கவேண்டும். பிறகு வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி , புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்க்கவேண்டும். அதோடு காளான்,  மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா பொடி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் கழுவி வைத்துள்ள வரகு அரிசியுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கினால் சுவையான சத்தான வரகு அரிசி காளான் பிரியாணி தயார்.