ராகி ரவா இட்லி (ராகி = கேழ்வரகு)
தேவையான பொருட்கள்
ராகி மாவு ஒரு கப்
ரவை ஒரு கப்
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் 5 (விழுதாக்கிக்கொள்ளவும்)
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி (டீ ஸ்பூன்)
கெட்டி தயிர் - ஒரு கப்
கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிது
சமையல் சோடா அல்லது ஃப்ரூட் சால்ட் - அரை தேக்கரண்டி
பெருங்காயதூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
ரவையை வறுத்துக்கொண்டு அதனுடன் ராகி மாவையும் சேர்த்து தயிரில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, மிளகாய் விழுது மற்றும் பெருங்காயதூள் போட்டு தாளிக்கவும். இதை தயிரில் ஊறிய மாவோடு உப்பு சேர்த்து கலக்கவும். (மாவு பதத்திற்கு தக்கவாறு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்) சமையல் சோடா கலக்கவும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவைத்து எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும். (கார சட்னி ஏற்றது)