கம்பு தோசை
தேவையான பொருட்கள்
கம்பு மாவு - ஒரு கப்
தோசை மாவு - மூன்று கப்
இஞ்சி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - நான்கு
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
தோசைமாவுடன் கம்பு மாவு, இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை கலந்து தோசை ஊற்றுவதற்கு ஏற்ற பதத்திற்கு தேவையான அளவு தண்ணீர்விட்டு கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் தோசை சுட்டு எடுக்கவேண்டும். கம்பு தோசை தயார். வெங்காய சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தோசையின் மேல் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு ஆனியன் தோசையாகவும் கொடுக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
கம்பு ஒரு சிறுகுறிப்பு
கம்பு ( Pennisetum glaucum, Pearl Millet) ஒரு சிறுதானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப்பயிர். இது இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
சாதாரணமாக கம்பு தற்போது அனைத்து மளிகை கடைகளிலும் கிடைக்கிறது. மக்களிடம் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு பெரு்பாலானோர் சிறுதானிய உணவு வகைகளை சமையல் செய்து உண்கின்றனர்.
கம்பில் உள்ள சத்துக்கள்
தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பில் அதிக அளவு உள்ளது.
100 கிராம் கம்பில்,
42 கிராம் கால்சியம் சத்து உள்ளது.
11 முதல் 12 மில்லி கிராம் இரும்புச் சத்து உள்ளது.
பி 11 வைட்டமின் சத்து 0.38 மில்லி கிராம் உள்ளது.
ரைபோபிளேவின் 0.21 மில்லி கிராம் உள்ளது.
நயாசின் சத்து 2.8 மில்லி கிராம் உள்ளது.
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
மருத்துவ பயன்கள்
உடல் உஷ்ணமடைய செய்வதை குறைக்கிறது.
வயிற்றுப்புண் மலச்சிக்கலை தவிர்க்க வல்லது.