தேவையான பொருட்கள்
கம்பு - 2 கிண்ணம்
வெங்காயம் - 2 No's
பச்சைமிளகாய் - 4 No's
கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளவேண்டும். கம்பை ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் அரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும். இவற்றை மாவில் சேர்த்து பிசைந்து தோசைக்கல்லில் அடைகளாக (வடைகளாக) தட்டி எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவேண்டும். இப்போது சூடான அடை தயார். இதனை பெரும்பாலும் மாலை நேரங்களில் சாப்பிடலாம். நல்லதொரு சத்தான உணவாகும். தேவையெனில் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
குறிப்பு
கம்பை உலரவைத்து அறவை இயந்திரக்கடையில் கொடுத்து மாவாக்கி வைத்துக்கொண்டும் தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம்.