கம்பு கொழுக்கட்டை


கம்பு கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்
கம்பு - கால் கிலோ
துருவிய தேங்காய் - ஒரு மூடி
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 4
உப்பு சிறிதளவு

செய்முறை


முதலில் கம்பை மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி புடைத்தால் மேல் தோல் முழுவதும் வந்துவிடும். பின்னர் வெறும் வாணலில் அந்த கம்பை போட்டு கம்பு சிவக்கும் வரை வறுக்கவும். வறுத்த கம்பை நைசாக மிக்சியில் அரைக்கவும். பின்பு வெல்லத்தை தூளாக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி லேசாக கொதிக்கவைத்து வெல்லப்பாகாக தயார் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.  கம்பு மாவு, தேங்காய், பொடித்த ஏலக்காய் மற்றும் உப்பு ஆகிய நான்கையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். அதில் வெல்லப்பாகை ஊற்றி கிளறவும். ஆறிய பின் கொழுக்கட்டைகளாக பிடிக்கவும். பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி குக்கர் அல்லது பானையில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இப்போது சுவையான கொழுக்கட்டை தயார்.

பயன்கள்

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தை சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.
* இளநரையைப் போக்கும்.