கொள்ளு குருமா
தேவையான பொருட்கள்:
கொள்ளு ஒரு கப்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி சிறிதளவு
வெங்காயம் - 2
உப்பு மற்றும் எண்ணெய் தேவையான அளவு
அரைக்க
மிளகாய் வற்றல் - 2
கசகசா - அரை தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை
முதலில் கொள்ளை முதல் நாள் இரவே ஊற வைக்கவேண்டும். கொள்ளை குக்கரில் வைத்து மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து நைசாக மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். பின்பு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவேண்டும். பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி. குறுக்கே வெட்டிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் தக்காளி நன்றாக வெந்ததும் வேகவைத்த கொள்ளு. அரைத்த விழுது தேவையான அளவு உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி கொதிக்கவைக்கவேண்டும். கடைசியில் கொத்தமல்லியை தூவி இறக்கவேண்டும். பின்பு பரிமாறவும்.
பயன்கள்
கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கக்கூடியது,
கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.
கொள்ளுப் பருப்பை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல், கண் நோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன், மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும். பிரசவ அழுக்கை வெளியேற்றும். கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.
எலும்புக்கும், நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு நம் முன்னோர்கள் அளித்தனர். கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.