பிரண்டை பற்றிய குறிப்பு
பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும்.
பிரண்டை துவையல்
தேவையான பொருட்கள்
பிரண்டை - ஒரு பிடி
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் - 2 அ 3
தனியா - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 3 அ 4 பல்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - வதக்க தேவையான அளவு
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு
செய்முறை
பிரண்டையை கழுவி,சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி,வெங்காயம்,பூண்டு,காய்ந்த மிளகாய்,தனியா,பிரண்டை துண்டுகள்,புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பிரண்டை நன்கு வதங்க வேண்டும்.இல்லையெனில்,சாப்பிடும் போது நாக்கு அரிக்கும்.வதங்கியதும் சிறிது நேரம் ஆற வைத்து,சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில்,கடுகு,உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த துவையலில் சேர்க்கவும்.
பிரண்டை துவையல் தயார்.இந்த துவையல் வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
சாம்பார் சாதம்,ரசம் சாதம்,தயிர் சாதத்துடன் தொட்டும் சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.
பயன்கள்
அஜீரணக்கோளாறு, வாயு சம்மந்தப்பட்ட நோய்கள், இரத்த ஓட்டம் சீராகும், பெண்களுக்கான முதுகு வலி மற்றும் இடுப்பு வலிக்கு மிகச்சிறந்த மருந்து.