தினை பச்சை பயிறு பொங்கல்

தினை பச்சை பயிறு பொங்கல்


 
தேவையான பொருட்கள்:


   .தினை             - ஒரு கப்
    பச்சை பயிறு - ஒரு கப்
    நெய்                - தேவையான அளவு
    சீரகம்              - 2 தேக்கரண்டி
    இஞ்சி              - சிறிதளவு
    முந்திரி          - 10
    கருவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, கடுகு மற்றும் மிளகு - தேவையான அளவு


   
செய்முறை

    தினை மற்றும் பாசிப்பருப்பை நன்றாக கழுவி 5 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின்பு குக்கரில் 6 கப் அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவேண்டும். பின்பு வாணலியில் தேவையான அளவு நெய்விட்டு கடுகு, மிளகு, சீரகம் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து இவற்றை வேகவைத்துள்ள தினை மற்றும் பாசிப்பருப்புடன் சேர்த்து கிளறவேண்டும். மீண்டும் தனியாக வாணலியில் நெய்விட்டு முந்திரியை பொன் நிறமாக வறுத்து தாளித்து வைத்துள்ள பொங்கலுடன் கொட்டி கிளறினால் சுவையான மற்றும் சத்தான பொங்கல் தயார்.
இதனை சாம்பாருடன் பரிமாறினால் மிகவும் நன்றாக இருக்கும்.

தினை 



தினை (Foxtail millet) ஒரு தானிய வகை. இதை மனிதர்களும் விலங்குகளும் உணவாகப் பயன்படுத்துகின்றனர். தினை உலகிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியங்களில் ஒன்று. இது கிழக்காசியாவில் 10,000 ஆண்டுகளாகப் பயிரிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆங்கிலத்தில் இது மில்லட் எனும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ள தானியமாகும். தினைக்கதிர் என்பது நரி வாலைப் போல பச்சை நிறத்தில் காட்சியளிப்பதால் இது பாக்ஸ் டைல் மில்லட் என அழைக்கப்படுகின்றது. இது இட்டாலியன் மில்லட் எனவும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.


பயன்கள்

தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. இதற்கு இறடி, ஏளல், கங்கு என்ற வேறு பெயர்களும் உண்டு.

இதயத்தை பலப்படுத்துவதற்கு உதவுகிறது.
உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.
இது வெப்பத்தை உண்டு பண்ணும். எனினும், உடலை காக்கும் தன்மையுடையது.