இட்லி வெஜ் உப்புமா (இட்லி வெஜ் உசிலி)
இட்லி (இட்டளி) என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு வகையாகும். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவுவகைகளில் இது முதன்மையானது. அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற பொருள்களைக் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இட்லியானது வெற்று சுவையைக் கொண்டதால் தனியாக உண்ணும்போது நல்ல சுவையாக இருக்காது. இட்லியின் சுவையினைக் கூட்டுவதற்காக சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி, இட்லிப் பொடி போன்றவற்றை அதனுடன் சேர்த்துக்கொள்வார்கள்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தற்போது துரித உணவுகளில் ஆர்வம் காட்டுவதால் இட்லியாக நேரிடையாக கொடுக்காமல் இட்லியை ஒரு சில காய்கறிகளுடன் சேர்த்து இட்லி வெஜ் உசிலி அதாவது உப்புமாவாக கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் காய்கறிகள் உள்ளதால் தேவையான சத்துக்கள் அவர்களுக்கு கிடைக்கிறது.
தேவையான பொருட்கள்
உதிர்த்த இட்லி - மூன்று
வெங்காயம் - ஒன்று
கேரட் - ஒன்று
குடமிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
காய்ந்த மிளகாய் - ஒன்று
உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கடலை பருப்பு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறைகடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து அதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சைமிளகாய், இஞ்சி உப்பு சேர்த்து காய்கள் நன்கு வெந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள இட்லி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து கிளறி இறக்கவேண்டும்.
குறிப்பு
வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் அனைத்தையும் சிறிய அளவாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இவ்வாறு செய்து கொடுக்கும்போது விரும்பி உண்பர்.